search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் வக்கீல்"

    தெலுங்கானாவில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து கற்பழிப்பு செய்து விட்டதாக பெண் வக்கீல் அளித்த புகாரின் பேரில் நீதிபதி கைது செய்யப்பட்டார். #Telangana #JuniorCivilJudge
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டையில் 29 வயதான பெண் வக்கீல் ஒருவரை கற்பழித்ததாக சத்திய நாராயணராவ் (28) என்ற சிவில் நீதிபதி மீது புகார் எழுந்து உள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் அளித்த புகாரில், நீதிபதி தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு விட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாக கூறி உள்ளார்.

    இந்த புகாரின்மீது போலீசார் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி சத்தியநாராயணராவை நேற்று கைது செய்தனர்.  #Telangana #JuniorCivilJudge 
    ஒக்கி புயல் குறித்து ஆவணப்படம் எடுத்த மதுரை பெண் வக்கீல், போலீசார் மீது குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஊட்டி:

    மதுரையை சேர்ந்தவர் திவ்யா என்கிற திவ்ய பாரதி. இவர் ஆவண பட இயக்குனராகவும், வக்கீலாகவும் உள்ளார். இவர் ஒக்கி புயல் குறித்து ‘ஒருத்தரும் வரல’ என்ற ஆவண படம் எடுத்தார்.

    இந்த ஆவணபடத்தின் டிரைலர் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த படத்தில் தேசிய குறியீடு, அரசு மற்றும் அரசு படைகளை பற்றி சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக புகார் எழுந்தது.

    இது குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்காக மதுரையில் உள்ள திவ்ய பாரதியின் வீட்டுக்கு அவரை தேடி சென்றனர்.

    இதனை அறிந்த திவ்ய பாரதி ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, திவ்ய பாரதிக்கு 6 நாட்கள் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து திவ்ய பாரதி கூடலூக்கு சென்றார். அங்கு போலீஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அவர் கையெழுத்து போடுவதற்காக கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அப்போது போலீசார் 25 கேள்விகள் கொண்ட வினாத் தாளை திவ்ய பாரதியிடம் கொடுத்தனர். அதில் வருமானம் என்ன? வருமானத்துக்கான ஆதாரம், படத்தில் நடித்தவர்கள் நடிகர்களா? அல்லது நிஜத்தில் தொடர்புடையவர்களா? படத்தின் உண்மை தன்மை என்ன? என்பன உள்பட 25 கேள்விகளுக்கு இன்று (6-ந்தேதி)க்குள் பதில் அளிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    இது குறித்து ஆவணபட இயக்குனர் திவ்யபாரதி கூறியதாவது,

    எனக்கு சம்மன் அனுப்பாமல் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தி என்னை துன்புறுத்தினர். மேலும் கேள்வி தாளையும் என்னிடம் கொடுத்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறினர். எனக்கு ஜாமீன் கொடுத்த 2 பேரிடமும் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி உள்ளனர். இது முற்றிலும் தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விசாரணை அதிகாரியான மசினகுடி இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறியதாவது:-

    நாங்கள் விசாரணைக்காக அடிப்படையாக கேள்விகளை கேட்டு தான் வினாத்தாளை அவரிடம் கொடுத்துள்ளோம். இதற்கு பதில் அளிப்பது அவருடைய விருப்பம். இந்த படம் நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டது இல்லை. எனவே நாங்கள் படம் எடுத்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

    அரசுக்கு எதிராக காட்சிகள் படத்தில் இருப்பதால் படத்தின் உண்மை தன்மை மற்றும் படம் எடுத்தன் நோக்கம், படத்துக்கான வருமானம் என்ன? என்ற விசாரணைக்காவே கேள்விகளை கேட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×